Wednesday, June 10, 2009

நிகழ்வுகளும் சில நியங்களும்

அகிலத்தின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளியவளையில் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரங்களினால் நிகழ்த்தப்பட்டதென்பது ஊரறிந்த உண்மை. அத்தோடு தமிழர்களின் சுதந்திர தாயகத்திற்க்கான ஆயுதப்போராட்டத்தை அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தங்கள் ஊடகங்களில் மே மாதம் 18 ஆம் நாள் அறிவித்தது. இந்தப் பேரவலத்திறக்கும்இ மனித உரிமைமீறல்கள் நிகழ்ந்தற்க்கும் பல சான்றுகள் இருக்கின்றது. உலகத்தின் உத்தமர்களெல்லாம் கூடும் ஐ நா சபையில் அகிலத்தையாளும் ஐயாக்கள் சிலர் இதுபற்றி ஆளுக்காள் அனுங்கினர். ஆனாலும் சிலரதை அண்டப்புளுகுகளால் அடக்கியதும்இ சிலரதை மணவறைச்சிரிப்புடன் மௌனங்காத்து மளுப்ப முயன்றதும் நீங்களெல்லோரும் அறிந்ததே. இது உலகறிந்த உண்மையும் கூட.

பயங்கரவாதமென்று பச்சைச்சாயம் பூசிஇ பாரெல்லாம் சென்றுஇ தங்கள் பக்தாசலங்களிடம் படைவலுத்திரட்டி ஒரு தேசிய இனத்தையே பாழ்படுத்தி அழித்ததொழித்த பெருமை இந்த அண்டப் பெருவெளியில் சிறிலங்கா அரசாங்கத்தைத் தவிர வேறொருவருக்குமில்லை. தம் தாய்நிலத்தினை விளுங்கும் இராட்சத பூதத்திடமிருந்து தாயத்தை விடுவிக்க அதன் விடுதலைக்காகஇ பெரும்பான்மையினரால் அடிமைப்படுத்தப்படும் ஒரு இனத்தின் சுதந்திரத்திற்க்காகஇ அவர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்க்காக ஆயுதமேந்திப் போராடியவர்களை அழிக்க அகிலத்தைத் திரட்டியது. அதில் வெற்றிபெற்றதாக இப்போ இறுமாப்பும் கொள்கிறது.
சிறிலங்கா அரசின் இந்தப் போர்க்கச்சேரிக்கு இந்தியாஇ சீனாஇ பாகிஸ்தான்இ ரஷ்யா என்பன ஆயுதங்களை வழங்கிய பக்கவாத்திய கர்த்தாக்கள். அத்தோடு அணிசேர் கலைஞர்களாக (தமிழக முதலமைச்சர் கலைஞர் உட்பட)இ ஜப்பான்இ மலேசியாஇ மத்திய கிழக்கு நாடுகள்இ வியட்நாம்இ முன்னாள் சோவியத்யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள்இ கிழக்கு ஐரோப்பிய நாடுகள்இ மற்றும் ஆசிய நாடுகள் என்பனவும் பங்கேற்றுக்கொண்டன. இவர்களுடன் மேற்குலகம் உட்பட ஏனைய நாடுகளும் மறைமுகமாகச் சுருதிசேர்த்து ஆதரவாக ஆலவர்ணம் பாடின.

இதற்க்கெல்லாம் ஆதாரமாக பிரித்தானியாவின் பிரபல பத்திரிகையான டைம்ஸ் பத்திரிகை அண்மையில் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியா சுமார் 13.6 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான இயந்திர துப்பாக்கிகள்இ இராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட இராணுவ தளவாடங்களை சிறிலங்காவுக்கு விற்பனை செய்துள்ளது. ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும்இ பல்கேரியா 1.75 ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ளன என்று டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தங்களுக்கெதிரான யுத்தத்தை சிறிலங்கா அரசு முன்னெடுக்கஇ அகிலமே திரண்டு நின்று சிறிலங்கா அரசுக்கு மிண்டுகொடுத்து உதவுகின்றது என்பதைஇ தமிழீழ விடுதலைப் புலிகளுகளும் அறிந்திருந்தனர். அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட போது அவர்களதைப் பூரணமாகப் புரிந்து கொண்டனர். அத்தோடு தங்களுக்கெதிராக குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாட்டையும்இ இந்தியாவின் செயற்பாடுகளையும் புலிகள் துல்லியமாகக் கணிப்பிட்டிருந்தனர். சிறிலங்கா அரசுக்கு இந்தியாவின் ஆயுத ஆளணி வழங்கல் சேவைகளை உலகுக்கு வெளிக்குணரவும் வயப்பட்டனர். அதன் வெளிப்பாடே 2007ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வவுனியா வான்படை கட்டுப்பாட்டுத் தளத்தின் மீது வான்புலிகளும்இ கரும்புலிகளும் இணைந்து தாக்குதல் நடாத்திஇ அங்கிருந்த கண்கானிப்பு ராடர் கருவிகளை அழித்தனர். அத்தாக்குதலில் இந்திய இராணுவப் பொறியிலாளர்கள் இருவர் காயமடைந்தனர். இந்தச் செய்திகள் மெல்லமெல்ல வெளியே கசிந்தது. இந்தக் காலத்தில் சிறிலங்கா அதியுத்தம அரசதலைவர் மகிந்த ராஜபஷா விடுத்த அறிக்கையொன்றில் 'இந்தியா தந்த ராடர் கருவிஇ தாக்குதலுக்கு வந்த புலிகளின் வானூர்தியை கண்டறியத்தவறிவிட்டது' எனறு குறிப்பிட்டிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தியா சிறிலங்காவுக்குக் கொடுத்தது (2 னுiஅநளெழைn) ராடர் கருவி. இந்தியத் தயாரிப்பான இந்த (2 னுiஅநளெழைn) ராடர் கருவி புலிகளின் வானூர்தியை கண்டறியத் தவறிவிட்டது என்பதால்இ (3 னுiஅநளெழைn) ராடர் கருவியை இந்தியாஇ இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்து சிறிலங்காவுக்குக் கொடுத்ததும் நீங்களறிந்ததே.

இப்படியான சர்வதேசத்து சக்திகளின் உற்றதுணையோடு சிறிலங்கா அரசு உந்தும் யுத்த முன்னெடுப்பை விடுதலைப் புலிகளும் முழுமையாக உணர்ந்திருந்தனர். அதற்கேற்ப அவர்களும் தங்கள் யுத்த வியூகங்களை மாற்றியமைத்துக் கொண்டார்களென்று படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலப்பரப்பினைப் பாதுகாப்பதை விட சிறிலங்காப் படையினருக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்துவதிலேயே அவர்கள் கவனஞ் செலுத்தியிருந்தனர் என்றும் கூறுகின்றனர். கிளிநொச்சி்யில் இடம்பெற்ற மறிப்புச் சமர்களைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 200 வரையான புலிகளைப் பயன்படுத்தியிருந்த போதிலும்இ சிறிலங்காப் படையினருக்கு அதிகளவில் இழப்புகளைக் கொடுத்தனர். அத்தோடு ஆசிய சக்திகள்இ அகிலத்தின் அணுசரனையோடு தம்மோடு மோதுவதை தனியவே ஆயுத சக்தியால் மட்டும் எதிர்கொள்ள முனையவில்லை. இதனை அரசியல்இ இராஜதந்திர முறையில் அனுகஇ அதற்க்கழுத்தங்களை கொடுக்கும் பொறுப்பை புலம்பெயர் தமிழரிடம் விட்டிருந்தனரென்றும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றனர்.
கடந்த சனவரி மாதத்திலிருந்து இந்நாள் வரையிலும் எழுபதினாயிரத்திற்க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இதில் குழந்தைகள்இ சிறுவர்கள்இ பெண்களும் அடங்கல். இந்த எண்ணிக்கைக் கணக்கிலும் கூடக் ஐ.நாவிலுள்ள ஐயாக்கள் சிலரும்இ கண்டம் தாண்டியுள்ள சில காரியவான்களும் சிறிலங்காவிற்க்குச் சார்பாயிருந்து கணக்குவிடத்தான் பார்க்கிறார்கள்.

பாதுகாப்பு வலயமென சிறிலங்காப் படையினர் விரித்த வலை பிணக்குவியலாளும்இ அடுத்தகணமே அங்கவீனர்களாகும் மனிதர்களாலும் தான் நிரப்பியது. எறிகணை வீச்சில்இ படுகொலை செய்யப்படும் தமிழரிகளின் சடலங்களை புதைப்பதற்கு கூட எவருமில்லை. பட்டினியால் சாகும் அப்பாவிகளுக்கு உணவளிக்கச் சொல்லவும் முடியல்லை மாறாக அதைத் தாங்களே கொண்டுவந்து கொடுக்கவும் இந்த ஐ நா சபையினருக்குச் சக்தியிருக்கவில்லை. பதுங்கு குழிகளுக்குள் இருந்த அப்பாவி மக்களின்இ அடிப்படை மனித உரிமை குறித்து பேச முடியாவிட்டாலும் குறைந்தது அவர்களின் உயிர்களை அவர்களோடு இருக்கவாவது இந்த இழகிய இரும்பு மனம்கொண்ட ஐ நா சபை அனுமதிக்கவில்லையே!

பாதுகாப்பு வலயமென்று சிறிலங்காப் படையினர் விரித்த வலையினுக்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் இறுதியான மூன்று நாட்களும் முக்கியமானவை. மே மாதம் 16ஆம் நாள் சனிக் கிழமை தொடக்கம் மே மாதம் 18ஆம் நாள் திங்ட்கிழமை வரையிலும் பல சம்பவங்கள் மிகவும் சிறிய காலெல்லைக்குள் நடைபெற்றிருந்தன என்பது இப்போ அறியவருகின்றன. அதிகளவான மக்கள் கொல்லப்பட்டதுடன்இ பெருமளவான விழுப்புண்ணடைந்த அப்பாவிமக்களையும்இ போராளிகளையும் பாதுகாப்பாக ஒரு மூன்றாம் தரப்பினுடாக சரணடையவைக்கும் முயற்சிகளும் புலிகளால் அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றன. காயப்பட்ட போரளிகளை பாதுகாப்பாக நகர்த்தும் பொறுப்புகள் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசனிடமும்இ சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடமும்இ ஒப்படைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றன. ஏனைய போராளிகளும் பெருமளவான தளபதிகளும் 17 ஆம் நாள் இரவு வரையிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பு தாக்குதல்களில் வெளியேறியிருந்தனர் என படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சரணடைவதற்க்கு தமிழகஇ இந்தியஇ சர்வதேச அதிகாரிகள்இ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்இ சர்வதேச மூத்த ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரிடமும் உதவிகள் கேட்கப்பட்டன. ஆனால் எதுவும் நடைபெறவில்லையென்பது நீங்களறிந்த நிதர்சனம். இதற்கு 'த ரைம்ஸ்' இதழின் ஊடகவியலாளர் மேரி கொல்வின் என்பவரின் சாட்சியாகவுள்ளார். அவர் தன் கட்டுரையிலும் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வாதங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்தது. அதற்கு ஏதுவாக இலங்கை மீதான விவாதம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 26 ஆம் நாள் சில மேற்குலக மேதாவிகள் ஐ.நாவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்த போதும்இ 13 ஆசிய நாடுகளினதும்இ 13 ஆபிரிக்க நாடுகளினதும்இ கியூபா போன்ற நாடுகளினதும் ஆதரவுடன் மொத்தமாக 29 வாக்களிக்குகளால் அதை முறியடித்து சிறிலங்கா வெற்றிபெற்றுது. குறிப்பாக இதற்க்கெல்லாம் சூத்தரதாரி எம் பக்கத்து நாடான தமிழினத்துரோக பாரதநாடு தான். இந்த வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு எதிராக 12 நாடுகள் வாக்களித்தனர். எதிர்த்தோஇ ஆதரவாக வாக்களிக்காமல் 06 நாடுகள் மௌனம் சாதித்தனர். சிறிலங்காவுக்கு ஆதரவாகவும்இ மேற்குலக மேதாவிகளுக்கு எதிராகவும் ஆசியஇ ஆபிரிக்காஇ கியூபா போன்ற நாடுகளினதும் பல ஒருங்கிணைந்து குரல் கொடுத்தமைஇ தற்போது நிகழும் இந்து சமுத்திரப் பிராந்திய ஆதிக்கக் கயிறு இழுப்பில் மேற்குலக மேதாவிகளுக்கேற்பட்ட தோல்வியேதான். அதாவது தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தப் போரானது தமிழ் மக்களை விட மேற்குலக மேதாவிகளுக்கே அதிக தோல்வியைக் கொடுத்துள்ளது என்பது தான் படைத்துறை ஆய்வாளர்களின் ஆய்வுகளின் முடிவு.

இதனிடையே விடுதலைப் புலிகளின் தலைமை தொடர்பாக அடுத்தடுத்து முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. சிறிலங்கா இராணுத்தரப்பும் 17இ 18இ 19ஆம் நாட்களில் தங்கள் தகவல்களுக்கே முரண்பட்ட வகையிலே தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டன. விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து வெளிவந்த இரண்டு அறிக்கைகளிலும் பல இராஜதந்திர நகர்வுகளின் தாக்கங்கள் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் ஆரூடம் கூறுகின்றனர். அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன்இ சர்வதேச புலனாய்வுகளுக்கான பொறுப்பாளர் அறிவரசன் ஆகிய இவ்விருவரும் விடுதலைப்புலிகளின் அமைப்பின் முக்கிய மூத்த உறுப்பினர்கள் என்பது விடுதலைப் புலிகளையும்இ விடுதலைப் போராட்டம் பற்றியும் பூரணமாய் அறிந்தவர்கள் அறிவார்கள்.

இதில் பெரும்பாண்மைத்தமிழருக்கு ஒரு ஐயம். எந்த தகவல் சரியானதுஇ எது தவறானது என்பதானதொரு குழப்பம். இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான சிந்தனையும்இ அரசியல் முதிர்ச்சியும் தேவை. விடுதலைப்புலிகளின் தற்போதைய நடவடிக்கைகளில் அதிகளவிலான இராஜதந்திர நகர்வுகள் பொதிந்துள்ளன. அதன் பின்னால் ஓர் அனைத்துலக வலைப்பின்னலை விடுவிக்கும் நடவடிக்கைகளும் உள்ளன. அவர்கள் உலகிற்கு ஒரு தகவலை சொல்ல முற்பட்டுள்ளனரென்றும் அதே சமயம் தமிழ் மக்களுக்கும் அதனூடாக பிறிதொரு தகவலை கூறமுற்பட்டுள்ளனரென்றும் அவதானிக்க முடிகிறது. பல அழுத்தங்களும் அதன் மூலம் தேவையான பல அனுகூலங்களும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன என்பதே இந்த இரு தகவல்களினதும் பொருளென்பது ஆய்வாளர்கள் முடிவு.

இந்த இரு தகவல்களையும் உள்வாங்கிக்கொண்டு அரசியல் நகர்வுகளின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டிய பாரிய கடமை ஒன்று அனைத்துத்தமிழ் மக்களுக்குள்ளது என்பது மட்டுமே உண்மையின் உண்மை. போரியல் வரலாற்றில் சில தகவல்கள் நடைபெற்ற சம்பவங்களால் நிகழ்த்தப்பட்டன. ஆனால் சில தகவல்கள் ஒரு சம்பவத்தை உருவாக்குவதற்காக நிகழ்த்தப்படுகின்றன.
தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற தகவல்கள் வெளிவருவது இது முதல் தடவையல்ல என்பது தாங்களறியாததல்ல.

1984-09-05 ஆம் நாள் அதிர்ச்சியான செய்தி ஒன்று சிறிலங்கா பத்திரிகைகளிலும்இ இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியானது. சிறிலங்கா இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக அச்செய்திகள் விபரித்தன. தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும்இ உலகெங்கிலும் பரந்து வாழ்ந்த தமிழர்களிடையே பெரும் பரபரப்பும் பதைப்பும் ஏற்பட்டன. ஆனால் மறுநாள் காலை தமிழகத்தில் மதுரையில் உள்ள தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர் வீட்டிற்கு தலைவர் பிரபாகரன் சிரித்த முகத்துடன் பிரசன்னமானாராம். புன்னகையுடன் உள்ளே சென்ற தலைவர் பிரபாகரன் அந்த ஆதரவாளரின் சிறுமியாயிருந்த மகளை தூக்கி வாரி அணைத்துக்கொண்டு 'மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல' என நகைச்சுவையாகச் சொன்னாராம் அன்று.
25-07-1989 அன்று பரபரப்பான செய்தி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத் துணைத் தலைவர் மாத்தையா என்ற மகேந்திரராசாவுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் வன்னியிலிலுள்ள ஆனந்தப் பெரியகுளத்தருகே இருந்ததாகவும்இ இப்போது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டிருப்பதாகவும் சிறிலங்காஇ இந்தியஇ தமிழக பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன.

அன்றைய நாளில் வட-கிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வரதராசப் பெருமாள்இ இந்தச் செய்தியை அன்று உறுதிசெய்தார். அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவரென்பதும்இ யாரால் இந்த முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டாரென்பது ஆனால் இரண்டு நாட்களில் இச்செய்தியில் கொஞ்சம் கூட உண்மையில்லைஇ தலைவர் பிரபாகரன் உயிரோடு நலமோடு இருக்கிறார் என்பதை நாங்களனைவரும் தெரிந்து கொண்டோம். பின்னர் 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்இ சாவகச்சேரியில் நடந்த வைபவமொன்றில் எங்கள் முன் தோன்றினார் தலைவர்.

26-12-2004 அன்று அடித்த சுனாமியின்போது தலைவர் பிரபாகரனும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானும் சுனாமி பேரலைகளால் அடித்துச்செல்லப்பட்டதாகவும் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லையென்றும் ஒரு பரபரப்பான வதந்திச் செய்தி வெளியிடப்பட்டது. தலைவர் பிரபாகரனுக்காக விலைஉயர்ந்த சவப்பெட்டி ஒன்று வன்னிப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. அந்தச்செய்தியை சிறிலங்காக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயாசந்தகிரிஇ பிரபாகரனும் பொட்டு அம்மானும் சுனாமி அலைகளில் கொல்லப்பட்டார்கள் என்று உறுதிசெய்தார். சில நாளிதழ்களும் இச்செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்தன. ஆனால் விடுதலைப் புலிகளின் சார்பில் வெளியிடப்பட்ட மறுப்பு செய்தியை பிரசுரிக்கவே இல்லை. ஆனால் பத்து நாட்களின் பின்னர் நோர்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்பீட்டர்சன் கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கும் படத்தை இந்த நாளிதழ்களும் வெளியிட்டன. ஆயினும் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறியதற்கு ஒரு வருத்தம்கூட தெரிவிக்கும் நாணயம் இந்த நாளிதழ்களுக்கு என்றுமே இருந்ததில்லை.
15-12-2007 அன்று சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் தலைவர் பிரபாகரன் படுகாயமடைந்து இருப்பதாகவும் அவர் இரகசியமான ஒரு இடத்தில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பிழைப்பது இயலாத ஒன்று என்றும் பரபரப்பான செய்தியை சிறிலங்கா பாதுகாப்புத்துறை வெளியிட்டது.

இப்படியெல்லாம் பிரபாகரன் இறந்துவிட்டதாக வக்கிர செய்திகளை பரப்புவதில் சிறிலங்கா அரசும் இந்திய உளவுத்துறையான (சுயுறு) ரோவும் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கின்றன. ஆனால் இச்செய்திகள் சிறிது காலத்திலேயே பொய்த்துவிட்டன. தலைவர் பிரபாகரனை கொலை செய்ய பலதிட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனாலும் எல்லாவற்றிலிருந்தும் அவர் தப்பியுள்ளார்இ அவ்வாறே அவர் இப்போதும் மீண்டுள்ளார் என்பது இன்றைய உண்மை நிலை.
நான்காம் கட்ட ஈழப்போரை பொறுத்த வரையில் அதன் இறுதிக்கட்டம் கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் நாள் கிளிநொச்சி நகரம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து ஆரம் பமாகியிருந்தது. ஆனால் அதன் நகர்வுப் பாதை இனறும் புரியாத புதிராகவே பலருக்கும் தோன்றியிக்கின்றதென படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வசிப்பிடங்கள் தொடர்பான தெளிவான சான்றுகள் பலவற்றை விடுதலைப்புலிகள் தமது தளங்களில் விட்டும் சென்றிருந்தனர். அதை முன்னேறிய சிறிலங்காப் படையினர் கைப்பற்றியதாகவும்இ சிறிலங்காப் படைத்தரப்பு தகவல்களை வெளியிட்டன. அதாவது கடந்த பெப்ரவரி மாதம் விசுவமடு பகுதியை படையினர் கைப்பற்றிய போது நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த வீடொன்றில் தேசிய தலைவர் பயன்படுத்தும் உடைகளையும்இ சில மருந்துப் பொருட்களையும்இ கோல்ட் கொமாண்டோ ரக துப்பாக்கியையும் விட்டுவிட்டு சென்றிருந்தனர். அதன் பின்னர் தேசிய தலைவர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் பல பிரத்தியேக ஆவணங்களை விட்டு சென்றிருந்தனர். மகன் சாள்ஸ் அன்ரனியினதும்இ மகள் துவாரகவினதும் பரீட்சைக்குத் தோற்றிய பெறுபேற்றுத் தாள்களையும்இ அவர்கள் முன்னர் பாவித்ததாகக் கூறி சில விளையாட்டுப் பொருட்களையும்இ நெருங்கிய உறவினர்களுடன் மற்றும் தளபதிகளுடன் தலைவரது குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும்இ சிறிலங்காப் படைத்தரப்பு கைப்பற்றியதாக தங்கள் ஊடகங்களில் அதனை வெளியிட்டனர். இந்த மூலம் சிறிலங்கா இராணுவமும்இ சிறிலங்கா அரசாங்கமும் தலைவர் பிரபாகரன் தமது முற்றுகைக்குள் இருப்பதாக அவர்கள் கருதியிருந்தனர்.

ஆகவே அவர்களின் முழுப் படைப் பலமும்இ கவனமும் இங்கு திருப்பட்டிருந்தது. இதற்க்காக சிறிலங்காவின் எல்லாப் படைபலத்தையும் ஒருங்கமைத்து இவ்விடங்களில் மையப்படுத்தினர் என்பது அப்பட்டமான உண்மை. தலைவர் நிச்சயமாக இங்கேதான் இருந்தவரென்றால் இப்படியான பொருட்களையும்இ எச்சங்களையும் ஏன் விட்டுவிட்டு செல்லவேண்டும் என்ற தர்க்க ரீதியான வாதங்களும் எழாமலில்லை. விடுதலைப் புலிகள் பின்னகரும் போது எனறுமே தங்கள் ஆயுதங்களைஇ தங்கள் ஆவணங்களை விட்டுச் செல்வதில்லை. கிளிநொச்சி நகரம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சில வாரங்களின் பின் அங்கு சென்ற சர்வதேச ஊடகவியலாளர்களும் இதனை அப்போது தெரிவித்திருந்தனர். ஆதாவதுஇ கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகங்களிலும்இ மற்றய இடங்களிலுள்ள கட்டங்களிலும் கதவுகளில் திறப்பு மட்டுமே இருந்ததாகவும்இ வேறெந்தப் பொருட்களும் அங்கு இருந்திருக்கவில்லையெனஇ அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் அன்றைய நாட்களில் குறிப்பிட்டிருந்தனர். பாரிய ஆட்லறி உந்துகணைச் செலுத்திகளையும்இ கணரக ஆயுதங்களையும் மற்றும் படைத்தளவாடங்களை எடுத்து செல்பவர்களுக்கு ஒரு கோல் கொமோண்டோ துப்பாக்கியை கொண்டு செல்வது கடினமானது அல்ல என்கின்றனர் பிரபல படைத்துறை ஆய்வாளர்கள்.

இறுதி நேரத்தில் சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்த பின்புதான் தலைவர் தப்ப முயற்ச்சித்தார் என்பது முரணான வாதம். ஏனெனில் அப்படிப்பட்ட முட்டாள் தனமான முன்னெடுப்புக்களை விடுதலைப் புலிகள் என்றுமே முன்னெடுத்ததில்லை. ஆக சில நிகழ்வுகள் அங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன என்று இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றர். இறுதி நாளான திங்கட்கிழமை காலை பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் வெளியுலகுடன் தொடர்பு கொண்டது நீங்களனைவரும் அறிந்ததே. அவர் பேசும் போதுஇ பின்புலத்தில் அவருக்கருகில் கேட்க்கப்பட்ட வெடியோசைகளையும்இ குண்டுச்சத்தங்களையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அப்போதய அவரின் குரலிலிருந்து அவர் தன் இறுதி நேரத்தை நெருங்கி விட்டாரென்பதையும் நீங்களறிந்திருப்பீர்கள்.

அந்த அபத்த நிலையிலும்இ அவரின் இறுதி நேரத்திலும்இ ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்ற போதும் ஒரேயொரு கேள்வி தான் அவரிடம் கேட்க்கப்பட்டது. (எங்களின்) உங்களின்இ உலகத்தமிழினத்தின் ஏன் தமிழ்ச்சாதியின் ஒட்டுமொத்தக் குரலாய்இ வேண்டுகையாய் அவரிடம் கேட்க்கப்பட்டது அந்த ஒரேயொரு கேள்வி தான் அது தலைவர் எங்கே?
அந்தப்பதில் தெளிவாகவும்இ எம்மீது நிலைகொண்டுஇ நீண்டிருந்த சோகத்திலும் எமக்குச் சற்றுத் தெம்பாகவுமிருந்தது. தலைவர் பாதுகாப்பாக இருக்கிரார் என்பதுதான். தமிழினத்தின் கற்பனைக்கெட்டாத கர்மவீரனாகஇ காவிய நாயகனாகஇ தமிழினத்தின் வியத்தகு வீரனாகஇ இனத்தின் விடுதலை ஆன்மாவாகஇ தமிழினத்தின் மீட்பராகத் தலைவர் பிரபாகரனும்இ தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியமைக்கும் சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது அடிமனதில் உறைந்து விட்டனர் என்பது அகிலமறிந்த உண்மை. இதை எவராலும் எக்காலத்திலும் மறுத்துரைக்க முடியாது.

அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை
-திருக்குறள்-

நன்றி இணையத்தளம்

தாயகத்திலிருந்து
கவே.கரிகாலன்.


Wednesday, June 3, 2009

தன்னிகரில்லாத் தமிழன் "பிரபாகரன்"


'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் வாளோடு முன்தோன்றி மூத்தக் குடி' என புகழ்பெற்ற வீரக்குடியினராகத் தமிழர்கள் சிறந்திருந்தார்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேரன், செங்குட்டுவன் ,ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ் செழியன் ,கரிகால்பெருவளத்தான் ,இராஜராஜ சோழன் இராஜேந்திரசோழன் என மன்னாதி மன்னர்கள் பலர் தங்கள் வீரத்தால் தமி ழனின் பெருமையை இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும்இ அதற்கப்பால் மேற்கே ரோமாபுரியிலிருந்து கிழக்கே சீனம் வரையிலும் பரப்பியிருந்தார்கள்.
பொற்கோட்டு இமயத்தில் விற் கொடியைப் பொறித்து தமிழனின் வீரத்தை உலகறியச் செய்த சேரன் செங்குட்டுவனின் படைத்தளபதியாக விளங்கியவன் வில்லவன் கோதை.
உத்தரபாரதத்தின் ஏக சக்ரவர்த்தியாக விளங்கிய ஹர்ஷவர்த்தனன் தென்னகம் நோக்கி படையெடுத்தபோது அவனைத் தோற்கடித்த பெருமைக்குரியவன் சாளுக்கிய மாமன்னன் புலிகேசி. அத்தகைய பேராற்றல் படைத்த பெருவீரனான புலிகேசியை முறி யடித்து அவனின் தலைநகரமான வாதாபியை அழித்த மாமல்லச் சக்கரவர்த்தியின் படைக் குத் தளபதியாக விளங்கியவன் பரஞ்சோதி.

அசோக சக்கரவர்த்தியினாலேயே வெல்ல முடியாத கலிங்கத்தை வென்றான் குலோத்துங்கச் சோழனின் படைத்தளபதியாக விளங்கிய கருணாகரத் தொண்டமான். தமிழர்களின் வீரவரலாறு விவரிக்கும் அழிக்கமுடியாத உண்மைகள் இவை.
பழமையும் பெருமையும் மிக்க தமிழர் வரலாற்றுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்காலமாக எத்தனையோபேர் பெருமை சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இது எல்லாம் பண்டைய பெருமையாய் பகற்கனவாய் மறந்துவிட்டன. எந்தெந்த நாடுகளில் தமிழன் வெற்றிக்கொடி நாட்டினானோ அந்தந்த நாடுகளிலேயே தமிழன் கொத்தடிமையாகச் சென்று வாழத் தொடங்கினான். தமிழர்கள் என்றாலே நல்ல கொத்தடிமைகள் என்று உலகம் கருதியது. அடிமைச் சேற்றில் நெளியும் புழுக்களாக புறநானூற்றுத் தமிழர்கள் ஆன இழிநிலை வந்தது. அடிமை வாழ்வினைத் தமிழன் விதியென நினைத்து ஏற்றுக்கொண்டான்.

'விதியே விதியே தமிழச்சாதியை என்செய நினைத்தாய்' என மகாகவி பாரதி மனம்நொந்து பாடும் அளவுக்கு தமிழனின் படை நிலை தாழ்ந்தது. வெள்யைனை எதிர்த்து தமிழ்நாட்டில் பூலித்தேவனும் வீரபாண்டிய கட்டபொம்ம னும் ஊமைத்துரையும் வீரமருதுச் சகோதரர்களும் தமிழீழத்தில் பண்டார வன்னியனும் போராடியபோது தமிழர்கள் உறங்கிக் கிடந்தார்கள். அந்த மறவர்களின் வீரப்போராட்டத்திற்குப் போதுமான ஆதரவளிக்கவில்லை. கோழைகளாகிவிட்ட தமிழர்களுக்கு நடுவே வாழ்வதை விடத் தூக்கிலே தொங்கி மடிவதே மேல் என அம்மாவீரர்கள் மாண்டு போனார்கள். அதற்குப் பிறகு தமிழர்கள் எவரேனும் ஆயுதம் தூக்கிப் போராடத் துணியவில்லை. இந்தியாவின் சுதந்திரப்போராட்டம் நடைபெற்றவேளையில் கூட தமிழகத்தில் ஆயுதப்புரட்சி உருவாகவில்லை.

வ.உ.சி.யும். பாரதியும் ஊட்டிய தேச பக்திக்கனல் ஒரே ஒரு வீரவாஞ்சிநாதனைத் தோற்றுவித்தது. ஆனால் அப்போதும் தமிழகம் கிளர்ந்தெழவில்லை. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற்கொண்டாரடி! கிளியே! ஊமைச் சனங்களடி! என பாரதி சித்தம் நொந்தான். பகற்கனவாகப் போய்விட்ட இந்தப் பழம்பெருமைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்துஇ முதன்முதலாகத் தமிழர்களே நடத்தும் ஆயுதப் புரட்சிக்கு வித்திட்டு அதற்குத் தலைமை தாங்கியிருப்பவர் 'தம்பி' பிரபாகரன் ஆவார். இதன்மூலம் தமிழ்க்குலம் வீரத்தளபதி எவரையும் தோற்றுவிக்கவில் லையே என்ற குறையை பல நூற்றாண்டு களுக்குப் பிறகு பிரபாகரன் போக்கி இருக்கிறார்.

உலகில் தமிழனுக்கென்று ஒரு தனி நாட்டினை அமைக்கும் திருப்பணிக்காகத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டுள்ள தியாகப்படை ஒன்றை அமைத்து அதனை வழிநடத்திச் செல்கிற பிரபாகரன் தமிழர் வரலாற்றில் இதுவரை யாரும் கண்டும் கேட்டுமறியாத அற்புத சாதனையைப் புரிந்திருக்கிறார். விடுதலைக்காகப் போராடிய பல் வேறு நாடுகளில் பல தலைவர்கள் இத்த கைய விடுதலைப் படைகளை அமைத்தது உண்டு. ஆனால் அவர்களுக்கெல்லாம் ஏதேனும் ஒரு நாடோ அல்லது பல நாடுகளோ உதவி புரிந்தன. இந்தியாவின் மாபெரும் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் இந்தியாவைவிட்டு வெளியேறி னார். அந்த நிலையிலேயே அவர் உலக மறிந்த தலைவர். ஜெர்மனியும்இ ஜப்பானும் அவருக்கு உதவிசெய்ய போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தன. இந்திய மக்களின் மாபெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருக்கு உலகத்திலேயே இரண்டு பெரிய வல்லரசுகள் என்னென்ன உதவிகள் தேவையோ அந்த உதவிகளைச் செய்து கொடுத்தன. பிரிட்டிஷ் இந்திய இராணு வத்தில் பணியாற்றி ஜப்பானியர்களால் சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த இந்திய போர்வீரர்களை மீட்டு அவர்களைக்கொண்டு இந்தியத் தேசிய இராணுவத்தினை நேதாஜி சிங்கப்பூரில் உருவாக்கினார். இந்த இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள். மற்ற உதவிகள் ஆகியவற்றை ஜப்பான் கொடுத்தது. நேதாஜியின் சுதந்திர அரசை ஜப்பான் ஜெர்மனி இத்தாலி மற்றும் நட்பு நாடுகள் அங்கீகரித்தன.

நேதாஜியை தனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கிற அருமைத் தம்பி பிரபா கரனை நேதாஜியுடன் ஒப்பிடமுடியாது. வயதிலும் சிறியவர் அனுபவத்திலும் சிறியவர். நேதாஜியைப் போன்ற பெரிய தலைவராக உருவாகி அதற்குப் பின்னர் அவர் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை. இளைஞராயிருந்தபோது தன்னுடைய பதினாறாவது வயதில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.நேதாஜிக்கு உலக வல்லரசுகள் துணைபுரிந்தன. அருமைத் தம்பி பிரபாகரனுக்கு திக்கற்ற தமிழ் இளைஞர்கள் மட்டுமே துணைநின்றனர். வேறு எந்த நாடும் எந்த வல்லரசும் அவருக்கு உதவிபுரிய முன்வரவில்லை. ஆனால் அமெரிக்கா சீனா பாகிஸ்தான் இந்தியா போன்ற நாடுகள் அள்ளி அள்ளித்தரும் நவீன ஆயுதங்களை வைத்திருக்கக்கூடிய சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டி யடிக்கிற விடுதலைப் படையை பிரபாகரன் உருவாக்கியவிதம் கற்பனைக்கு எட்டாதது. அதைப் போலவே வலிமை வாய்ந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து அவர் நடத்திய வீரப்போராட்டமும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. இதை எப்படி அவர் சாதித்தார்? இன்னமும் புரியாத புதிர்தான். தமிழ்நாட்டிலும்இ தமிழீழத்திலும் இன்னும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தருகிற சிறுசிறு உதவிகளைப் பெற்று அவற்றைக் கொண்டு ஆயுதங்களை வாங்கி தனது போராட்டத்தை அவர் தொடர்ந்து நடத்துகிறார். இராணுவ பலம் மிக்க ஒரு எதிரியை எதிர்த்து மக்கள் பலத்தைத் தவிர வேறு எந்த பலமுமில்லாமல் போராடிவரும் அவரது துணிவுக்கு ஈடுயிணையே இல்லை.

தமிழீழத்தில் சுற்றுப்பயணங்கள் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து அறிந்ததன் விளைவாக எனக்கு ஒரு உண்மை தெளிவாகப் புரிந்தது. தமிழீழ விடுதலைப் போரின் முன்னணிப் படையாக விடுதலைப் புலிகளின் இயக்கம் திகழ்கிறது. அரசியல் அறியாத சிறுவர்களாக அவர் களைக் கருதுவதும் அவர்களின் முயற்சி வெறும் தற்கொலைக்கு ஒப்பாகும் என் றெல்லாம் சிலர் பேசிவருவதும் எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் நேரில் கண்டேன்.

வியட்நாம் விடுதலைப்போராட் டத்தை அந்நாட்டு மக்கள் உறுதியாக நடத்தியதைப் போல தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகள் வீறுகொண்டு நடத்துகிறார்கள். இதை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றி வருகிறார்கள். மக்களின் துணையோடு தங்கள் விடுதலைப் போராட்டத்தை அவர்கள் விரிவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் வீரப்போராட்டத்தின் விளைவாக சிங்கள இனவெறி ஆட்சியின் அத்திவாரம் ஆட்டம் கண்டிருக்கிறது.

விடுதலைப்புலிகள் முன்னின்று நடத்தும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மூலம்தான் தமிழினம் தன்னை முழுமை யாக உணரத்தொடங்கியுள்ளது. ஜாதிஇ மதம்இ கட்சி போன்றவற்றால் பிளவுபட்டுக் கிடந்த ஈழத்தமிழ் இனம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினால்தான் ஒன்றுபட முடிந் திருக்கிறது. உலகம் பூராவிலும் உள்ள தமிழர்களுக்கு எழுச்சியையும் உணர்ச்சியை யும் ஊட்டுகிற ஒரு போராட்டமாகவும் அவர்களை ஒன்றுபட வைக்கிற ஒரு போராட்டமாகவும் இப்போராட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

எந்தவொரு நாட்டின் விடுதலைப் போராட்டமும் தகுந்த தேசியத் தலைமை யின் வழிகாட்டல் இன்றி வெற்றிபெற்ற தில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத் திற்கும் இது பொருந்தும். இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முற்றிலும் தகுந்த தேசியத் தலைமையை விடுதலைப் புலிகளின் இயக்கம் தம்பி பிரபாகரன் வடிவத்தில் தந்துள்ளது. தமிழீழ மக்களும் இதை மனமுவந்து ஏற்றுக்கொண்டுள்ளனர். நானே நேரில் கண்ட உண்மை இது. 1985ஆம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களிலும்இ 1987ஆம் ஆண்டு செப்டம்பரிலும் தமிழீழப்பகுதியில் சுற்றுப் பயணம் செய்து பலதரப்பு மக்களையும் கண்டு பேசி அவர்களின் உள்ளத்து உணர்வுகளைப் புரிந்து கொண்ட பிறகே இதை எழுதுகிறேன்.

தம்பி பிரபாகரன் அவர்களைத் தமிழீழ மக்கள் தங்களது தவப்புதல்வனாகக் கருதுகிறார்கள். மனமார நேசிக்கிறார்கள். சிங்கள அரக்கர்களின் கொடுமைகளில் சிக்கித்தவித்து அடிமை இருளில் தடுமாறிக் கொண்டிருந்த தங்களின் வாழ்வில் தோன்றிய நம்பிக்கை நட்சத்திரமாக அவரைக் கருதுகிறார்கள். தமிழீழ மக்கள் தங்கள் நாடு முழுமையாக விடுதலை பெற்றால் ஒழிய தங்களுக்கு வாழ்வில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அறவழியில் அதை அடைய முடியாது என்பதைக் கடந்த 30 ஆண்டுகால அனுபவம் அவர் களுக்கு உணர்த்தியிருக்கிறது. சமரசப் பேச்சுக்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக்காது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு இழப்புஇ இவ்வளவு அழிவு வ்வளவு தியாகத்திற்குப்பின் இனி ஒரு போதும் பின்வாங்கமுடியாது. விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துதுச் செல்வதைத் தவிர வேறுவழியில்லை என்பதை ஐயந்திரிபர உணர்ந்திருப்பதோடு அவ்வாறு செய்வதற்குத் தகுதியானவர் பிரபாகரனே என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்

என வள்ளுவர் வாக்கின் பொருளை நன்குணர்ந்த ஈழமக்கள் தங்கள் விடுதலை என்னும் அரிய செயலை முடிக்கத் தக்கவன் பிரபாகரனே என்பதைத் தெளிந்து தேர்ந்து அவர் தலைமையை ஏற்றுக்கொண்டிருக் கிறார்கள். தனது சொந்த உறுப்பினர்களைக்கூட கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத இயக்கங் களையும் தலைமைகளையும் கண்டு மனம் வெறுத்துப்போன தமிழீழ மக்கள் அவற்றோடு புலிகள் இயக்கத்தை ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்த்தபிறகே இத்தகைய முடிவுக்கு வந்திருக்கிறார்கள். கட்டுப்பாடு ஒழுக்கம் இவற்றோடு தியாகமும் வீரமும் நிறைந்தவர்களாகப் புலிகளை மக்கள் கருதுகிறார்கள். மக்களால் வளர்க்கப்படும் மக்கள் இயக் கமாகப் புலிகள் இயக்கம் வளர்ந்திருக்கிறது. மக் களின் ஒத்துழைப்போடு தங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாகப் புலிகள் மாற்றியுள்ளனர்.

அடிமைச்சேற்றில் நெளியும் புழுக் களாகத் தமிழர்களைக் கருதியவர்கள் இன்று அவர்கள் புலிகளாக மாறி உறுமுவதைக்கண்டு கிலிகொண்டு நடுங்குகின்றனர். விடுதலைப்புலிகளின் வீரத்தினாலும்இ தியாகத்தினாலும் தமிழி னமே தலைநிமிர்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள் ளது. இதற்கு வழிவகுத்தவர் பிரபாகரனே. காலங்காட்டும் இந்த உண்மைகளை உணராது தனது இராணுவபலத்தைக் கொண்டு பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அழித்துவிட சிங்களர் முயலுவது பேதமை யாகும். இந்த நோக்கம் ஒரு போதும் நிறைவேறப்போவதில்லை.

தங்கள் சிந்தும் இரத்தத்தினால் ஈழமண் சிவந்துகொண்டேயிருந்தாலும் வங்கக்கடல் செங்கடலானாலும் பிரபாகரனும் அவரது தோழர்களும் தங்களின் இலட்சியக்கனவு நிறை வேறும்வரை போராடுவார்கள். தமிழீழத்தின் சுதந்திரக் கொடியை ஏற்றும் வரை தொடர்ந்து போராடியே தீருவார்கள். அவர்களுக்குக் காலம் இட்டிருக்கிற கட்டளை இது. அதை மீற எவராலும் இயலாது.

- பழ.நெடுமாறன் எழுதிய
'பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்'
நூலிலிருந்து சில பகுதிகள்.

Monday, June 1, 2009

முகவுரையா? முடிவா??

உலகத்தின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் தமிழர் தாயகத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் நடைபெற்றதென்பதை உலகத்தின் திசையெங்குமிருக்கின்ற மனிதநேயமுள்ள மாந்தர்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ஒரே இலங்கை ஒரே நாடு என்று வெளியுலகுக்குக் கூறிக்கொண்டு தமிழர்களைக் கொல்வதற்கு இலங்கையரசு இந்தியாவோடும் அதன் பகை சக்திகளான பாகீஸ்த்தானுடனும் சீனாவுடனும் கைகோர்த்துக் கொண்டு அவர்களின் அசுர பலத்தோடு செயற்பட்டதை சில சிந்தயுடை சீலர்கள் எடுத்துரைத்துள்ளனர். கடந்த சனவரி மாதத்திலிருந்து இந்நாள் வரையிலும் எழுபதினாயிரத்திற்க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இதில் குழந்தைகள்இ சிறுவர்கள்இ பெண்களும் அடங்கல். இந்த எண்ணிக்கைக் கணக்கிலும் கூடக் கண்டம் தாண்டியுள்ள சில காரியவான்களும் கணக்குவிடத்தான் பார்க்கிறார்கள்.

எண்ணற்ற தடவைகள் எம்முறவுகள் உணவுக்கும் மருந்துக்கும் சிறிலங்கா அரசிடம் கேட்டு ஏங்கியேங்கி நின்ற போதுஇ சிறிலங்கா அரசு கொடுத்ததெல்லாம் நாசியால் சுவாசிக்க நச்சுஇ இரசாயனக் குண்டுகளும்இ பாடையேறிப் போகப் பல்குழல் எறிகணைகளும் மட்டுமே. தாகத்திற்குக் குடிப்பதற்கு தண்ணீர் கூடவில்லாமல் பதுங்கு குழியிலிருந்த அப்பாவிகளுக்கு அரசு விநியோகித்த நிவாரணம் பச்சக் கூண்டோடு பரலோகம் செல்லப் பயணச் சீட்டுத்தான். பாதுகாப்பு வலயமென்று சிறிலங்காப் படையினர் விரித்த வலையினுக்குள் பிணக்குழிகளாகும் பதுங்கு குழிகளும்இ அடுத்தகணமே அங்கவீனர்களாகும் மனிதர்களாலும் தான் நிரப்பியது. எறிகணை வீச்சில்இ படுகொலை செய்யப்படும் மக்களின் சடலங்களை புதைப்பதற்கு எவருமில்லை. பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருக்கும் அப்பாவி மக்களின்இ அடிப்படை ஜனநாயக உரிமை குறித்து பேசஇ முடியாவிட்டாலும் குறைந்த அவர்கள் உயிர்களை அவர்களோடு இருக்கவாவது இந்த இழகிய இரும்பு மனம்கொண்ட ஐ நா சபை அனுமதிக்கவில்லையே!

பாலைவனத்தில் நிற்பவனுக்கு குடிப்பதற்குப் பச்சத்தண்ணீர் தான் அப்போதைய தேவை. அவனிடம் நடந்து என்னருகே வாஇ நான் பிரியாணியும் பீஷாவும் தருகிறேன் என்று சொல்வது போலதான் இருக்கின்றது இந்த இனவாத இலங்கையரசும் ஐ.நா கூறும் நல்லுலகுகளும். நீங்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரச கட்டுப்பாட்டுக்கு வாருங்கள்இ வந்தால் உங்களுக்குப் பொதுமன்னிப்பளித்துஇ புது வாழ்வளிக்கப்படும் என்று வாய் கிளியக் கத்திஇ அதையும் அனைத்துலகத்தின் அனுசரனையுடனும் ஆசீர்வாதத்துடனும் அகோரமான முறையில் சாதித்து முடித்து விட்டனர். அறுபது வருடத்திற்கு மேலாக கரைபுரண்டோடிய இனப்பிரச்சனைக்கு கடந்த முற்ப்பது வருடமாக முனைப்புப்பெற்ற ஆயுதப் போராட்டத்தினை பயங்கரவாதமென்ற பதம்கொண்டு பரிந்துரைக்கும் பண்பாளர்களால் பட்டினியால் சாகும் அப்பாவிகளுக்கு உணவளிக்கச் சொல்லவும் முடியல்லை மாறாக அதைத் தாங்களே கொண்டுவந்து கொடுக்கவும் இந்த ஐ நா சபையினருக்குச் சக்தியிருக்கவில்லை.

வன்னி மக்களை தன் ஆட்சிக்குட்பட்ட மக்களென்றும்இ அவர்களை பயங்கரவாத்திலிருந்து மீட்பதற்கன யுத்தமென்று பிரச்சாரப்படுத்திஇ இந்தயுத்ததினை முன்னெடுத்து அவர்களை அழித்தொழித்துஇ அங்கவீணப்படுத்தியது அரசதரப்பு. ஆயினும் அவர்களுக்குரிய மிகச்சாதாரண விடயமான உணவையும் மருந்தையும் கூட அங்கிருக்கும் போதும்இ இப்போதும் கூட கொடுப்பதற்க்கு முடியாமல் போயிற்று இந்த மகிந்த கூட்டுக் குடும்பத்திற்க்கும்இ அவர்களுடன் ஒன்றாகி வெண்கொற்றக் குடைபிடிக்கும் குறுந்தாடிக்காரர்ககும். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாணத் துடிக்கும் ஐநா ஐயாக்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எதற்க்கும் மகிந்த குடும்பம் மசியவில்லை. மகிந்தா ஊதும் மகுடியை அந்த ஐயாக்கள் ரசிப்பார்களே தவிரஇ அவர்கள் சொல்லும் எதையும் மகிந்த காதுகொடுத்து என்றுமே கேட்பதில்லை. ஆக இதுவே இப்படியிருக்க எப்படி எம் நெடுங்கால இனப்பிரச்சனைக்குத் தீர்வு தருவார்கலேன்று நாம் நம்பிக்கொண்டிருப்போம்? அதையும் மீறி நேர்மையான தீர்வுக்காக இனச்சிக்களிலுள்ள நேரியஇ நெடிய முடிச்சுக்களை அவிழ்த்து அனைவரையும் சமமாக நடத்திஇ நாட்டில் எமக்கும் முழுச்சுதந்திரத்தினையும் இவர்கள் தருவார்களென்று எம்மில் எவராவதொருவர் எண்ணுவாரெனின் அவர் ஒரு அரசியலறிவில் சூனியமானவறென்றே அர்த்தப்பிரவாகமாகும்.

தங்கள் தாயக சுதந்திரத்திற்கான தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் அதன் வீரியங்க்கொண்ட ஆயுதப் போராட்டமும் வீச்சாக வளர்ந்ததுஇ தங்களுக்கு எந்த வகையில் வில்லங்கமென்று அறியாத போதிலும்இ சிறிலங்கா அரசின் ஆலோசணைக்கமைவாக அண்டப் பெருவெளியிலுள்ள நாடுகளிலெல்லாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரான தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்தது. அதுமட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 'பயங்கரவாத' பட்டஞ்சூட்டி பாரிலியே ஒதுக்கி வைத்தது இந்த பாழ்பட்ட உலகம். உண்மையிலேயே இந்தப் போராட்டம் பயங்கரவாதமென்றாலும் அந்தப் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்க்கு யார் காரணம்? ஆயுதந்தாங்கிய இந்தப் போராட்டம் எதனால்இ எப்படி உருவானது? என்பதை ஆராயத் தவறிவிட்டார்கள் இந்த மேதாவிகள்.
பயங்கரவாதம் என்றால் என்ன? பயங்கரவாதம் எவ்வாறு தோற்றம் பெறுகிறது? என்பதை எள்முனை அளவுகூட இவர்கள் அறியாததா என்னஇ உலத்தின் நீதிகளையும் நெறிமுறைகள் எல்லாவற்றையும் உருவாக்க அறிந்த இந்த அறிஞ்ஞர்களால்இ இதைப்பற்றியறிய முடியாமல் போயிற்றா? எங்களின் பயங்கரவாதம் பற்றியும் நன்கு அறிந்தவார்கள் அவர்கள். ஆயினும் ஏனோ இன்று வரை மௌனமாக இருந்து வருகின்றனர். எனக்கும் இதைப்பற்றி தெரியாதது. ஏதோ ஒரு உளவியல் நூலில் பயங்கரவாதத்தின் தோற்றம் பற்றி அன்றோருநாள் வாசித்த ஞாபகமிருக்கிறது. தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் அல்லது ஒரு சமூக மக்களின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே 'பயங்கரவாதமாக' வெளிப்படுபகிறது என்று பிரபல உளவியல் நிபுணர் சர்த்தர் இன்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பே வரையறை செய்து விட்டார். ஆக பயங்கரவாதமென்று இவர்களால் வர்ணிக்கப்படும் இந்த ஆயுதப்போராட்டம் பிரபாகரனென்ற தனியொரு மனிதனாலோஇ தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற குறிப்பிட்ட இயக்கக்குழுவினாலோ முன்னெடுக்கப் படவில்லை. ஒட்டுமொத்த தமிழர் தரப்பின் ஆதங்கமாகவே இந்த ஆயுதப்போராட்டம் ஆரம்பமானது. ஒட்டுமொத்த தமிழர் தரப்பின் அரசியல் அபிலாசையாகவேஇ அவர்களின் குரலாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் ஒலித்ததுஇ இன்றும் ஒலிக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் விடுதலைக்காக ஆயுதம் தரித்திருக்கிறார்கள். அதற்கான அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இவர்களின் எண்ணத்தில்இ இந்த பயங்கரவாதச் சூத்திரத்தின் படி தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றால் ஒட்டுமொத்த தமிழர்களும் பயங்கரவாதிகள் தான். இதில் எவருக்கும் எள்ளளவேனும் எந்தச் சந்தேகமுமில்லை. ஏனெனில் தமிழ் மக்களிலிருந்து தான் புலிகள் பிறப்பெடுத்தார்கள்.
முப்பது வருடமாக முனைப்புப் பெற்று நீண்ட இந்த ஆயுதப்போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் விலைமதிக்க முடியாத எத்தனையோ அர்ப்பணிப்புக்களைஇ எத்தனையோ தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இருபத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களை தாயக விடுதலைக்காக இழந்திருக்கிறார்கள். கெரில்லாப் போர் முறையில் ஆரம்பித்த போராட்டம் தரைப்படைஇ கடற்ப்புலிப்படைஇ வான்புலிப்படை என மரபு ரீதியில் வளர்ந்துஇ பல வீரசாதனைகளையும் சாதித்தது உலகப் போரியல் வரலாற்றிலேயும் தடங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஐந்துஇ ஆறு வருடத்துக்கு ஒரு முறை ஆட்சிக்கு வரும் தென்னிலங்கை ஆட்சியாளர்களோடு அவ்வப்போது அரசியல் ரீதியில் தீர்வுகாண்பதறக்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் ஆர்வம் காட்டினார்கள். திம்புவிலிருந்து ஒஸ்லோ வரையான பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தது இதற்க்கான சான்றுகள். தாங்கள் தனியவே ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஆயுத மோகங்கொண்ட வன்முறையாளர்கள் அல்லர் என்பதை எண்ணற்ற தடவைகள் அவர்கள் நிரூபித்துள்ளனர். எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து இரண்டாயிரத்தின் நடுப்பகுதி வரையான இருபது வருடங்களுக்கு மேலாக சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தது இதற்க்கு சிறந்த சான்றாகும். அத்தோடு விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக முன்னிறுத்திஇ விடுதலைப் புலிகளின் தலைமையையே தமிழ்த் தேசியத்தின் தலைமையாகக் ஏற்றுக்கொண்டுஇ தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் நின்று போட்டியிட்ட போதுஇ தமிழ் மக்களால் அது அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு தமிழர் தாயகத்தில் அதிகப் பெரும்பாண்மை ஆசனங்கள் வழங்கப்பட்டது. ஆக ஜனநாயக ரீதியாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர் தரப்பு அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. தமிழீழ தேசம்இ தமிழ்த் தேசியம்இ தமிழீழ தேசியத் தலைவர் என்ற கட்டமைப்புக்குள் முப்பது வருடமாக இந்த வாழ்வோடு ஒத்துப்போய் விட்டார்கள். தமிழினத்தின் வியத்தகு வீரனாகஇ இனத்தின் விடுதலை ஆன்மாவாகஇ தமிழினத்தின் மீட்பராகத் தலைவர் பிரபாகரனும்இ தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியமைக்கும் சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது அடிமனதில் உறைந்து விட்டனர் என்பது அகிலமறிந்த உண்மை. புலிகளையும் தமிழினத்தையும் பிரித்துப் பார்த்துக் கருத்துச் சொல்லும் எவருமே தமிழினத்தைப் பொறுத்த வரையிலே வன்முறையாளர்களே. இதற்கு ஐ நா சபையும் சரி இல்லை அண்டத்தையாளும் அதிகாரிகள் எவராயினும் சரி விதிவிலக்காக முடியாது.

ஆனாலும் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத் தன்மையையும் அவர்களின் அரசியல் அபிலாஷைகளையும் தென்னிலங்கை ஜனநாயகப் பிதாமகர்களும் தென்னிலங்கை இனவாதக் கும்பல்களும் என்றுமே மதித்தது மரியாதை செய்ததுமில்லை அதைப் புரிந்து கொள்ள முயற்ச்சித்ததுமில்லை. மாறாக போராட்டங்களின் தலைமைகளை அழித்துஇ போராட்டங்களை நசுக்கித் தமிழ் மக்களை அடிமைகொள்ளவே அறுபது வருடமாக அரும்பாடுபட்டு வந்தது அதை இன்றைய காலத்தில் நிறைவேற்றியதாக மார்தட்டிக் கொள்கின்றது. கொழும்பிலிருந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் வெளநாட்டு மகான்களும் மனிதாபிமானம் மனித உரிமைகள் பற்றி மார்பு நிமிர்த்திப் பேசும் மனிதநேயம் மிக்க மாந்தர்களும் மணவறைச்சிரிப்புடன் மௌனமாகவே இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு எங்களின் பிரச்சனைகள் தெரியாததல்ல. எனினும் இதை உள் நாட்டுப் பிரச்சனையயென்று சிறிலங்கா அரசு பூசிய முலாமினை அவர்களால் சீண்ட முடியவில்லை. எங்களை அணுகி அரவணைக்க சிறிலங்கா அரசின் இறையாண்மையென்ற திரைச்சீலை முட்டுக்கட்டையாகவிருந்து தங்களை மறைப்பதாக மறைமுகமாக அவ்வப்போது முனுமுனுத்தனர்.

2006ம் ஆண்டு ஆவணி மாதம் சிறிலங்கா இராணுவ இயந்திரம்இ தங்கள் அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகி தென்தமிழீழம் சம்பூரிலிருந்து தமிழின அழிப்பினை ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாக நீண்ட அந்தச் சமரில் தமிழ் மக்களின் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்க்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினை முற்றாக விட்டுவிட்டுப் பின்வாங்கினர். உத்தியோக பூர்வமாகத் தென்தமிழீழத்தின் ஆதிக்கத்தை இழந்து வடதமிழீழத்திலேயே தங்கள் முழுக்கவனத்தினையும் செலுத்தி வந்தனர். கிழக்கின் உதயதயமென்று சொல்லி அதிலேயே கிறங்கிப் போயிருந்த அரச தரப்பினர் 2008ம் ஆண்டு முற்பகுதியிலேயே வடக்கின் வசந்தத்தைக் காண்பதறக்காண ஆரம்ப கட்ட வேலையில் முனைந்தனர்.
இங்கே நடந்து முடிந்ததாகச் சிறிலங்கா சொல்லும் போரினைப்பற்றி பேசுவது எம் நோக்கமல்ல. அது பற்றிப் படைத்துறை நிபுணர்களாலேயே ஆராய்ந்து பதில் கூறமுடியாது விளிபிதுங்கி நிற்க்கஇ அதற்க்குள் மூக்கை நுளைத்துஇ விவஸ்த்தைப்பட நான் விரும்பவில்லை. சில வேளைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இஸ்ரேலின் போர் முறையைக் கையாளலாம். இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கெதிரான போரில் வளைகுடா நாடுகளின் ஒட்டுமொத்த சக்தியால்இ இஸ்ரேல் ஒருமுறை முற்றாகத் தோற்கடிக்கப்பட்டது. எனினும் இஸ்ரேலின் வீரர்கள் எதிரி நாடுகளுக்குள் ஊடுருவிஇ அந்தந்த நாட்டின் வானூர்திகளைக் கொண்டே அதிரடியாக அந்த நாடுகளைத் தாக்கினர். இதை நான் வாய்யாலத்திற்க்காகச் சொல்லவில்லைஇ இது வரலாறு. இதையொத்த அதிரடித் தாக்குதல்களை எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகளால் நடத்தக்கூடும். இதற்க்கு வலுவாக சிறிலங்காவின் இராணுவத் தளபதியே கருத்துச் சொல்லியிருக்கிறார்இ விடுதலைப் புலிகள் சிறு குழுக்களாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடிவிடுவார்களே தவிரஇ இனி அவர்களால் முன்னையதைப் போல தாக்குதல் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார். ஆக தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படவில்லையென்று அவரே ஒத்துக்கொள்கிறார் போலும். அவரின் அந்தக் கருத்தை ஏற்பதும்இ நிராகரிப்பதும் உங்கள் தெரிவு. விடுதலைப் புலிகளின் பலமும் இதுதான்இ அடுத்தவரால் ஆய்வு செய்து கணக்கிட முடியாதது தான்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போருக்கு அன்றிலிருந்து இன்று வரை அரச தரப்பினர் கவர்ச்சிகரமான பெயர்களைச் சூட்டுவது வழக்கம். ஒப்பறேஷன் லிபறேஷன் தொடக்கம் சந்திரிகா அம்மையாரின் காலத்தில் சமாதானத்திற்க்கான யுத்தமென நீண்டு இப்போ மனிதாபிமான யுத்தமென நிற்க்கிறது. வடக்கிலே சிறிலங்கா இராணுவ இயந்திரம் மன்னாரில் போரினைத் தொடங்கிய போது தமிழ் மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள இடம்பெயர்ந்து சென்றது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்க்கே. மாறாக அவர்கள் இந்த அரச இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்க்கு செல்லவில்லை. தொடர்ந்து இராணுவம் முன்னேறி வரவர தள்ளித்தள்ளி இந்த மனிதக் கேடயங்கள் முள்ளிவாய்க்கால் வரை சென்றார்களே தவிர ஏனைய இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்க்கு விரும்பி செல்லவில்லை. ஆக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமே தமிழர் தரப்பு தங்களுக்குப் பாதுகாப்பான இடமென ஏற்றுக்கொண்டு அங்கு இடம்பெயர்ந்து.

இந்தியா பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட ஏழு ஆசியநாடுகளின் முழுப்படைபல ஆதரவுடனும் இராணுவத் தளபாட வளங்கல் சேவை ஒப்பந்தத்துடனும்இ அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் போன்ற ஆதிக்க சக்திகளின் ஆசீர்வாதத்துடன் அரங்கேறிய இனப்படுகொலை யுத்தம் இறுதியாக முள்ளிவாய்க்காலில் இந்த மாதத்தில் முற்றுப் பெற்றதாகச் சிறிலங்கா அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அன்றிலிருந்து இன்று வரை தமிழருக்கெதிரான போரில் எத்தனையோ தமிழ் உயிர்களை அரச பயங்கரவாதம் பலியெடுத்த போது ஏறெடுத்துப் பார்த்துஇ ஏனென்று கேட்காத இந்தக் கேடுகெட்ட உலகத்தினர் திடீரென்று இப்போது வெளிப்பட்டு வந்து விடுதலைப் புலிகளை மட்டும் வன்முறையாளர்கள்இ பயங்கரவாதிகள்இ மக்களை மனிதக் கேடயமாகப் பாவிக்கிறார்கள் என்று வாய்க்கு வந்தபடி வெளுத்து வாங்குகிறார்கள். தமிழர்களிடம் சுயாதீனமாக எந்தக் கருத்தையும் கேட்காமல்இ அவர்களின் அபிலாஷையைப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீதே மிக மோசமான கருத்து வன்முறையைப் பிரயோகித்து இந்த முப்பது வருட கால வாழ்வைக் குலைப்பதென்பது மிக அப்பட்டமான கண்டிக்கத்தக்க மனித உரிமை மீறலும் மிகமோசமான வன்முறையுமாகும்.

சிறிலங்கா அறிவித்தது போல உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாக சிறிலங்கா இராணுவம் தோற்கடித்துவிட்டதா? தொடர்ந்து தாயக சுதந்திரத்திற்க்கான போர் இனி நீளாதா? இந்தப் போர் இத்தோடு நசுக்கப்பட்டு விட்டதா? என்ற நெஞ்சு கணத்த கேள்விகள் தான் இப்பொழுது ஈழத்தமிழரின் வாய்களிலிருந்து வெளிவருகிறது. உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் எம்முறவுகள் மட்டுமின்றி தமிழக தொப்பூள் கொடியுறவுகளும் தென்னாபிரிக்காஇமலேசியா மொறீசியஸ் பிஜித் தீவுகளிலும் வாழும் தமிழர்களின் உணர்வும் உந்துணையும் இதுதான். இந்த கேடுகெட்ட உலகத்தால் ஈழத்தமிழ்ச் சாதி வஞ்சிக்கப்படுகிறார்கள் ஏமாற்றப்படுகிறார்கள்இ புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள் என்று ஒட்டு மொத்த உலகத் தமிழினமுமே அச்சம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது இப்பொழுது.

தமிழீழத் தமிழர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் எல்லாப் பொறுப்பினையும் புலிகளின் தலையில் போட்டுவிட்டுத் தாங்கள் ஒதுங்கி இருந்துவிட்டனர். தலைவர் இருக்கிறார்இ அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார்; பொடியங்கள் விடமாட்டாங்கள்இ புலிகள் அடிப்பாங்கள் என்ற விளாசல் விமர்சனத்தோடு அவர்கள் பொறுப்பில்லாமல் இருந்துவிட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் போராடித் தமிழீழம் பெற்றுத்தருவார்கள் தானே என்ற உண்மையான அதீத நம்பிக்கையுன் இருந்துவிட்டனரே தவிர வேறொன்றுமில்லை.

இப்பொழுது எங்களின் இந்த இனப்பிரச்சனை பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் விவாதித்துப் பேசும் நிலை நீண்ட காலத்தில் கனிந்திருக்கிறது. புலம்பெயர் தமிழர்களால் இடைவிடாதகவனயீர்ப்புப் போராட்டங்களால் அந்தந்த நாட்டின் அரசுகள் தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ அவற்றுக்கு மதிப்பளிக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளனர். கடந்த 25ம்இ 26ம் நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகளுக்கான அமர்வில் சிறிலங்காவைப் பற்றியும் பேசப்பட்டது. 25ம் நாளில் தொடங்கிய விவாதம்இ 26ம் நாள் வரை நீடித்தது. சிறிலங்கா அரசு சார்பாகவும்இ சுவிற்சிலாந்து அரசு சார்பாகவும் இரு பிரேரணைகள் சபைக்குக் கொடுக்கப்பட்டிருந்து. சிறிலங்கா அரசு சார்பான பிரேரணை விவாதத்திறக்கு வந்ததும்இ சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக 22 நாடுகளும்இ எதிராக 17 நாடுகளும் வாக்களித்தனர். எதற்க்குமே வாக்களிக்காமல் 07 நாடுகள் மௌனம் சாதித்தனர். பின்னர் சிறிலங்கா அரசின் வேண்டுகோளான நிதியுதவிக்கு 13 ஆசிய நாடுகளினதும்இ 13 ஆபிரிக்க நாடுகளினதும்இ கியூபா போன்ற நாடுகளினதும் ஆதரவுடன் மொத்தமாக 29 வாக்களிக்குகளால் வெற்றிபெற்றது. இதற்க்கு எதிராக 12 நாடுகள் வாக்களித்தனர். எதிர்த்தோஇ ஆதரவாக வாக்களிக்காமல் 06 நாடுகள் இதற்க்கும் மௌனம் சாதித்தனர். இந்த மௌனத்தில் யப்பானும் உள்ளடங்கலென்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். சுவிற்சிலாந்து அரசின் பிரேரணையும் சிறிலங்காவினைப் பற்றியாகவே இருந்தது. சபையின் ஒழுங்கின்படி ஒரு நாட்டினைப்பற்றி விவாதத்திற்க்கு ஒரு தடவையே இடமளிப்பதால் சுவிற்சிலாந்து அரசின் பிரேரணை சபையில் விவாதத்திற்க்கு எடுக்கப்படவில்லை. சுவிற்சிலாந்து அரசின் பிரேரணை தமிழர் தரப்புக்குச் சார்பானாதாக சிலர் எண்ணக் கூடும். அது முற்றிலும் தவறானது. சிறிலங்கா அரசின் பிரேரணையும் சுவிற்சிலாந்து அரசின் பிரேரணையும் சில வேற்றுமைகளே தவிரஇ பல ஒற்றுமைகளும்இ பல ஒத்த கருத்துக்களும் இருந்தது என்பதே உண்மை. இதில் எங்குமே தமிழர் தரப்புஇ போர்க்குற்றம்இ இனப்படுகொலை என்ற எந்த வார்த்தைப் பிரயோகமும் பயன்படுத்தப்படவில்லையென்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளென்றும்இ கிழக்கிலே உதயமுண்டாகி மீள் குடியேற்றம் முற்றாக முடிவுற்றாதாகவும் அண்டப்புழுகினை சிறிலங்கா தரப்பு அள்ளி விட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் இப்பொழுது இந்தத் தீர்மானம் எம்பக்கமாக வெற்றி பெறாது நாம் தோற்றுப்போனாலும்இ அடுத்தடுத்த பிரேரணைகளில் என்றோ ஒரு நாள் நாம் வெற்றி பெறுது உறுதி. ஐக்கிய நாடுகள் சபை நாட்டிலுள்ள உச்ச நீதிமன்றமில்லைஇ ஒருதரத்தோடு தீர்ப்புக கூறி வழக்கை முடித்துவிடுவதற்க்கு. இத்தோடு எல்லாம் முடிவடைந்ததென்று நாம் சலித்துவிடக் கூடாது. ஏனெனில் எங்கோ ஒரு மூலையிலுள்ள முல்லைத்தீவுஇ முள்ளியவளையில் நடந்த போரினைப்பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் இப்பொழுது பேசும் நிலை வந்திருக்கிறது. உள் நாட்டுப் பிரச்சனையயென்று சிறிலங்கா அரசு பூசிய முலாமினை மீறிஇ சிறிலங்கா அரசு கட்டிய இறையாண்மையென்ற திரைச்சீலையை நீக்கி பாரிலுள்ளவர்கள் இப்போ எம்மைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். தங்கள் திருவாய் திறந்து ஏதோ பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பிரபலமான உலக ஊடகங்களும் தங்கள் மூடிய கண்களைத் திறந்து பார்க்கிறார்கள்இ நெடுநாள் அமைதியைக் கலைத்து செய்மதி மூலம் எடுத்த புகைப்படங்களைஇ காணொளிகளை வெளியிட முனைகிறார்கள். இது சர்வதேச ரீதியான போராட்டத்தின் ஆரம்பமே. இதற்க்கெல்லாம் காரணம் புலம்பெயர் எம்முறவுகளால் முன்னெடுக்கப்படும் இடைவிடாத கவனயீர்ப்புப் போராட்டங்களேயன்றி வேறொன்றுமில்லை.

எது எவ்வாறாயினும் தந்திரங்களையும்இ தலைமோதும் தடைகளையும் தகர்த்து எம் பொன்னான தாயகமான சுதந்திர தமிழீழத்தினை பெற்றெடுக்கும் வரை நாமெல்லோரும் ஒன்றுசேர்ந்து எம் சக்திக்கேற்ப ஓயாது தொடர்ந்தும் போராடுவோமாக.

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அது மறுபடியும் வெல்லும்'

தாயகத்திலிருந்து
கவே.கரிகாலன்.

ஊடகப்போரும் உலக ஊதுகுழல்களும்

ப்பொழுது உலத்திதிலுள்ள ஊடகங்களில் முதன்மைச் செய்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்காப் படையினாரால் கொல்லப்பட்டார் என்பதும் அச்செய்தி பற்றிய சாதக பாதக ஆராய்ச்சி ஆய்வுகளுமே.. இது பற்றி அந்த ஊடகங்கள் செய்தி வெளியிடும் போதும் சிறிலங்காப் படையினர் தெரிவிப்பதாகவே குறிப்பிடுன்றன. இது உண்மையில் தமிழின விரோதிகளும்இ சிறிலங்கா அரசும் அதன் இராணுவ இயந்திரங்களும்இ அத்தோடு கூடி சர்வதேச சதிகளும் சேர்ந்து ஈழத்தமிழரையும் உலகத்தமிழரையும் உலுப்பிவிட பரப்பட்ட திட்டமிடப்பட்ட சதிகார வேலையே தவிர வேறொன்றுமில்லை.

சிறிலங்கா அரசும் அதோடு சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களும் தமிழருக்கெதிரான போரில் வெற்றி பெற்றதென்பது உண்மையோ என்னவோஇ ஊடகப் போரிலும் பிரச்சாரத்திலும் வெற்றிபெற்றுவிட்டது. எண்ணற்ற பொருத்தமில்லாத பொய்களை அள்ளி விட்டுஇ அவையனைத்தும் தமிழ் மக்களையும் அவர்கள் தமிழீழப் போரில் கொண்ட நம்பிக்கையில் சலிப்படைய வைக்கவே இந்த திட்டமிட்ட வன்முறையான வதந்திகளை வெளியிட்டு வருகின்றது. உண்மையில் இதை அனைவரும் புரிந்துகொல்வதர்க்குச் சற்றுக் காலம் தாமதிக்கலாம். ஆனால் அவையனைத்தும் எல்லாத்தரப்பினருக்கும் வெளிச்சத்திற்கு வரும் காலம் வெகுதூரமில்லை.

இப்படிப்பட்ட வன்முறையான செய்திகள் எவ்வாறுஇ எந்தச் சந்தர்ப்பத்தில்இ எத்தரப்பினரால் வெளிவருவதென்பதையும் நாம் உற்றுநோக்க வேண்டும். முதலில் இந்தச் செய்தியை நேற்றுமுன்தினம் வெளியானது. அதாவது எத்தரப்பினரின் ஆதரவோடும் அனுசரணையோடும் அதைப் பிரசுரிக்கிரார்கலேன்று அடிப்படையினை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். தமிழ்விரோதக் குழுக்கள் தம் சுய இலாபத்திற்காக தங்கள் நீண்ட சிந்தனையைஇ மழிக்காத மந்தபுத்தியைக் கூராக்கி குதர்க்கமான குசும்புகளை எல்லாம் குற்றமற்ற குறுஞ்செய்திகளையும்இ குறிப்புணர்ந்துதெழுதும் கட்டுரைகளையும் கடுகதியியே வெளியிடும் வீரியமுண்டு இந்த கனவான்களுக்கு.

ஆரம்பத்திலே கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை பற்றியும்இ அவரின் மகன் பற்றியும் மிகச் சூசகமாகவொரு செய்தியினைக் கிழப்பியிருந்தனர். சிலகாலம் சிலரால் அச்செய்தியும் காவப்பட்டுச் சின்னாபின்னமாகியபின் சீரழிந்து போனது. பின்னர் கொஞ்சக்காலத்தில் புலானாய்வுப் பொறுப்பாளர் பற்றி புதியதொரு கதையை கட்டவிழ்த்தனர். அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் வீரச்சாவுக்கு அங்கிருந்தோரே காரணமாமென்று அலட்டிக்கொன்டனர்இ அதற்குப் பின்னும் அதையொட்டி அருவெருக்கத்தக்க வகையில் அதிகமாய் வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருந்தனர். இடைவெளியொன்றை விட்டு விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் பற்றியும் இழிவாய் பலவதந்திகளை எடுத்துவிட்டனர். ஆனால் அவர் இன்றுவரை உயிரோடிருந்து தமிழீழத்துப் போர்க்களத்தில் நின்றுகொண்டிருக்கிறார். அன்றொருநாள் அவுஸ்ரேலிய தமிழ் வானொலிக்கு தொலைபேசி மூலமாக நேர்காணலளித்து புலிகளின் நேர்மையினையும் நேசத்தலைவரின் நேரிய வழிகாட்டலையும்இ அவரின் ஆழுமை மிகுந்த நெறிப்படுத்தலையும் உலகறியபபடுத்தினார்.

சிறிலங்கா அரசும்இ அதன் இயந்திரங்களான அரச அச்சுஇ இலத்திரனியல் ஊடகங்களும் நீண்ட காலமாகவே எங்கள் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தைக் கொச்சைபடுத்திவந்தன. அத்தோடு போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் தமிழீழத் தேசியத் தலைவரைப் பற்றியும் அவர் குடும்பத்தினரைப் பற்றியும் எண்ணற்ற பொய்ப் பிரச்சாரங்களை அவ்வப்போது அள்ளிவிட்டுக்கொண்டே வந்தனர் இந்த அறிவுடை அதியுத்தம அரசாங்கத்தினரும் அவர்தம் கைக்கூலிகளும். தேசிய தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் வெளிநாட்டில் வாழ்கிறார்களென்று முதலில் வதந்திகள் வந்தன. தலைவர் தன் பிள்ளைகளைப் பாதுகாப்பாகவும் சொகுஷாகவும் வெளிநாடுகளில் வசிக்கவைத்துவிட்டு மற்ரையவர்களைப் போரிற்குப் பயன்படுத்துகிறார் என்றும் படுபாதகமாக பிரச்சாரம் செய்தனர்.

பின்னர் கொஞ்சக் காலங்கடந்த பின்னர் தேசிய தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனியும் களத்திலே நின்று போராடி வருகிறார் என்றும் தகவல்கள் கசிந்தன. போர் உக்கிரமடைந்து கிளிநொச்சியைப் படையினர் ஆக்கிரமித்த போது கண்டெடுத்ததாக சில புகைப்படங்களையும் தங்கள் இணையத்தளங்களில் வெளியிட்டனர் படையினர். அத்தோடு மகள் துவாரகாவின் புகைப்படமென்று சிலவற்றையும் இணையத்தில் காண்பித்தனர். உண்மையில் அன்றைய நாட்களில் துவாரகாவின் படமென வெளியிட்ட புகைப்படத்திற்கும் இன்று ஊடகங்கள் காண்பிக்கும் உண்மையான புகைப்படத்திற்கும் நூறுசதவீதம் முரண்பாடுகளுண்டு என்பதைப் படத்தைப் பார்த்தவர்களால் உணரமுடியும். சிலநாட்கள் கடந்ததும் இன்னும் பெரிய பொய்களை அள்ளிவிட்டது அரசு ஊடகம். கணனியில் புதிய தொழிநுட்பத்தினைப் பயன்படுத்தி புகைப்படங்களை தங்கள் எண்ணங்களுக்கேற்ற வகையில் வடிவமைத்து வெளியிட்டு மகிழ்ந்தனர் அரச தரப்பினர்.

தமிழர் தலைமையை தங்களின் உயிரையும் விட மேலாக நினைத்து மதிப்பளித்துப் போற்றும் தமிழ்ச் சமூகத்தினரிடமிருந்து தலைமையைப் பிரித்து விடுவதே இந்தக் குள்ளர்களின் குறுகிய நோக்கம். ஆயினுமிது அவர்கள் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதல்ல என்பது நம்மெல்லோருக்கும் தெரிந்தும் அவ்வப்போது நம்மில் சிலர் நமச்சலடைகின்றனர். போராட்டமென்பது வெறுமனவே ஆயுதத்தாலும் அதைத்தாங்கிய போராளிகளிகளாலும் மட்டும் வென்றுவிட முடியாதென்பது நாமெல்லோரும் அறிந்திருந்தும் நம்மில் சிலர் நகைப்பிற்கிடமான வகையில் நடந்து கொள்கிறார்கள் என்பதே எம்மைப் போன்றோரின் ஏக்கம். இதற்க்குப் பக்கபலமாகவும் சிலவேளைகளில் பங்காளியாகவும் செயற்பட்டு வருவது உலகத்திலுள்ள சர்வதேச ஊடகங்கள் என்பதுதான் எங்களுக்கு கவலையையும் வேதனையையும் தருகின்றது.

தமிழகத்தில் பெரும்பான்மையான அச்சுஇ இலத்திரனியல் ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை அங்கேயும் தொடர்ந்து வருகின்றது. உண்மை செய்திகள் வெளிஇட்டால் தங்கள் சுய இலாபத்திற்குப் பங்கமேற்பட்டுவிடுமென்ற குருகிய குருட்டுச் சிந்தனையால் அவர்கள் அவையனைத்தையும் தவிர்த்து வருகின்றனர். அத்தோடு சில சுயாதீனமான பிற ஊடகங்களையும் தங்களின் அதிகாரத்தினால் அடக்கி வருகின்றனர். அவர்களும் வர்த்தக விளம்பரங்களைக் கருத்தில் கொண்டு விவஷ்தைப்படுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்த வரையில் சதவீதமானவர்கள் கேபிள் கனெக்சன் எனப்படுகின்ற கம்பிவலைப் பின்னலூடாகவே தொலைக்காட்சியினைத் தரிசிக்கிறார்கள். அதிலும் அரச தலையீடுண்டு என்பதலினால் எந்தத் தொலைக்காட்சிழலும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலையுண்டு. ஆதலினால் அவனின்றி (கலைஞர்) அலைவரிசைகளும் அசைவதில்லை என்பது முற்றிலும் உண்மையானதுதான். இன்றைய நாட்களில் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்இ அதாவது ஈழத்தமிழரின் அவலங்களை வெளிக்குணர்ந்த மக்கள் தொலைக்காட்சி சிலநாட்களுக்கு முன் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டும்இ ஆளும் கட்சியினரால் மிரட்டப்பட்டதும் தான். இன்றைய செய்திகளில் அதனை ஒளிபரப்பும் கம்பிவலை நிறுவனம் மக்கள் தொலைக்காட்சி அலைவரிசையை தங்கள் அலைவரிசையிலிருந்து நிறுத்திவிட்டது.

ஒருமாதத்திற்கு முன் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தயாரித்து வெளியிடப்பட்ட ஒரு காணொளியை பல உலக இலத்திரனியல் ஊடகங்களும் ஒளிபரப்பின. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகச் சித்தரிப்பதற்க்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டது. இது உண்மையானதென்றும் அதை தாங்கள் உலங்கு வானூர்தியிலிருந்து பதிவு செய்ததாகவும் படைத்துறைப் பரப்புரை செய்தது. அந்தத் திருப்படத்தினை நானும் தரிசித்திருக்கிறேன். அதில் இரண்டு ஆயுததாரிகள் கூட்டமாக நிற்கும் பொதுமக்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்கள். அதாவது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்ல முயற்சிக்கும் புதுமக்களை விடுதலைப் புலிகள் தடுத்தி நிறுத்துவதையும்இ அதனையும் மீறி செல்லும் மக்களை நோக்கிப் துப்பாக்கிப்பிரயோகம் செய்கின்றனர் என்றும் அந்தக் கானொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறும் இரண்டு மூன்று ஆயுததாரிகள் பொதுமக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் போதும் மக்கள் ஓடாதுஇ அசைவற்றுஇ அவ்விடத்திலேயே நிக்கிறார்கள். எந்தவொரு வீரரும் தம்மை நோக்கிச் சுடுகலன்களால் சுடும் பொது தற்காப்புக்காகவேனும்இ ஒதுங்காமல் அப்படியே சிலையாக நிற்க மாட்டார்கள். ஆக இதிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்பவர்கள் யார்இ அந்த மக்கள் ஏன் ஓடாமல் நிற்கிறார்கள்இ என்பன வெளிப்படையாகவே தெரிகிறது. இவையெல்லாம் சர்வதேசத்திற்கு புரியாததா? அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறதா? என்பது நம் எல்லோர் மனதிலும் எழுகின்ற ஓர் எழிமையான கேள்வி. இதனை அரச ஊடகங்களும் அவர்களுக்க மிண்டுகொடுக்கும் மிதவாதா மித்துருக்களும் அடிக்கடி காண்பித்தனர்.

ஆயினுமிதை எவருமே தங்கள் சிரத்தினால் சிறிதளவேனும் சிந்திப்பதில்லை. எதற்கு சில காரங்கள் இருக்கலாம். சிலவேளைகளில் நாம் சிங்கள அரசின் சினத்தினத்திற்குள்ளாகி விடுவோமே என்ற பயப்பீதியோ? சிங்களன் சினக்கொண்டு சீறீனாலென்ன? செந்தமிழன் செத்தாலென்ன? அல்லது எவனாவது எக்கேடுகெட்டு சீரழிந்து போகட்டுமே என்ற ஏமாப்புப்பு தனோன்ற கேள்வி தான் எமைப் போன்றோரின் சித்தப்பிரமையும்இ சிரசேறிய சிந்தனையும். கொத்துக் குண்டுகளாலும் எறிகணை வீச்சாலும் செத்துக்கொண்டும் விழுப்புண்ணடைந்தும் சாயும் பிஞ்சுகளையும் மக்களையும் பார்க்காத சமத்தர்கள் தான் இந்த சர்வதேச சமூகத்தவர்கள். வனேறிவந்து வகைவகையாய் கொண்டுகளைக் கொட்டிஇ வாழ்வைத் துடைத்தழிக்கும் வல்லூறுகளைஇ நஞ்சுக் குண்டினை வீசி மூச்சுவிடக் கூட விடாமல் நாசிகளைக் நசுக்கும் நயவஞ்சகர்களை நாகரித்திர்க்குத் தன்னும் நவேடுத்துக் கேன்காதவர்கள் தான் இந்த உலக நாயகர்கள். உலகே தடைசெய்த இரசாயனக் கொண்டுகளையும்இ பூமத்தம் பூவுக்குக் கிட்டவே போகாத பிள்ளைகளுக்கு மேல கொடிய நன்சுக்குண்டுகளைப் போடும்போது கூட எமைப் பார்த்து பரிதாபபடாதவர்கள் தான் இந்தப் பாராளும் பண்பாளர்கள்.

எங்கள் சாவுகளுக்கு சலிப்படையாதவர்கள் இப்படிப்பட்ட இந்த காட்சிகளையும் வதந்திகளையும் ஏன் இவர்கள் வெளியிடவேணும். எனளின் தலைவர்கள் உயிரோடு இருக்கும் போதும்இ அவர்களைச் சாகடித்துஇ அவர்கள் சாவுகளை இவர்கள் ஏன் சரித்திரத்தினைப் போல சித்தரிக்க வேண்டும்? அதில் தான் அவர்கள் உச்சப் பயடைகிறார்கள். இன்று சிறிலங்கா அரசும் இந்திய அரசும் எதிர்நோக்கியுள்ள பெரும் சவால் சர்வதேச அழுத்தம். புலம்பெயர் தமிழர்களால் இடைவிடாதகவனயீர்ப்புப் போராட்டங்களால் அந்தந்த நாட்டின் அரசுகள் தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ அவற்றுக்கு மதிப்பளிக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளனர். முன்னரைப் போல எம்மவர்கள் இப்போது தொழிலாளர் சமூகம் மட்டுமல்ல. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு இந்தப் புலம் பெயர்ந்த சமூகம் வேலைக்காக மட்டுமே இந்த தேசத்தில் வாழ்ந்துவந்தனர். ஆனால் இப்போது அவர்கள் இந்த நாட்டிலே குடியுரிமையைப் பெற்று வாழ்ந்து வருவதால்
அவர்களின் பிள்ளைகள் அந்நாட்டின் வாரீசுகள் ஆகிவிட்டன. அத்தோடு இந்த இளைய சமூகம் அந்தந்த நாட்டின் மொழிகளிலும் கலாச்சாரத்திலும் வளர்ந்து வருவதால் அவர்கள் அங்கேயுள்ளவர்களுடன் சரளமாக உரையாடவும் விவாதிக்கவும் தகுந்த தகுதியுள்ளவர்கலாயிருக்கின்றனர். ஆதலாலும் தங்கள் நாட்டின் பிரைஞைகளை எதிர்க்க முடியாதுள்ளது. ஆகவே அவர்களின் கோரிக்கையை மதிக்கவேண்டிய நிலை அந்த நாட்டின் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆக இந்த தொடர் போராட்டங்களைக் குழப்புவதற்கும்இ அதன் வீரியத்தினைக் குறைத்துக் கொள்ளவும் இந்தக் குள்ள நரிக்கூட்டம் முனைப்புடன் செயற்படுகிறது. இந்தப் போராட்டத்தினைத தொடர்வதலே அவ்வப்போது சில நாடுகள் தங்கள் திருவாயைத் திறந்து அருள்வாக்குப் போன்று அறிக்கைகளை வெளியிடுகின்றன. ஆதலால் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை கட்டாயமாக நிறுத்திவைக்கவேண்டிய நிலைக்கு சிறிலங்கா இயந்திரம் இயக்கப்பட்டு விட்டது.

இந்தப் புலம்பெயர் தமிழர்களை புலிகளிடமிருந்து பிரிக்க முயன்று தோற்றுப் போனது இந்த சிங்கள பேரினவாத இயந்திரம். எனினும் புலம்பெயர் மக்கள் புலிகளை வெறுக்கச் செய்யும் நடவேடிக்கையினை முடுக்கி விட்டுள்ளது. அதன் வெளிப்பாடுகளே தமிழர் தலைவரின் மறைவான மடத்தனமான பிரச்சாரம். இதனால் தமிழர்கள் 'தலைவரே இல்லை இனியென்ன....' என்று சலிப்படைவார்கள் என்றேன்னியே கட்டவிழ்த்துவிட்டனர் ஒரு கடும் பொய்யை. அத்தோடு கூடி நீளும் போரை நிறுத்துமாறு பலமான வல்லரசுகள் சில கோரிக்கை வைத்தனர். அவர்களின் போர்நிறுத்தமென்ற வேண்டுகோளை தவிர்ப்பதற்காக தங்களின் தார்மீக கடமையை செய்கின்றனர் சிங்களர். எனினும் இவையனைத்தையும் உணர்ந்து தமிழர் தொடர்ந்து தங்கள் தாயக விடிவுக்கான இலட்சியப் பாதையில் பயணிக்கவேண்டும் என்பதுதான் எம்மெல்லோரின் தாகம். 'எழுச்சி கொண்ட எந்த மக்களும் வீழ்ச்சிகொண்டதாக சரித்திரமில்லை' என்ற அண்ணனின் அமுத வாக்கினை அடியொற்றி அவரின் வழிகாட்டலில் தொடர்ந்து தர்மநிலைனின்று போராடிஇ மக்கள் புரட்சியை தடுக்கும் நோக்கில் சிங்களத்தின் எச்சில் எலும்புக்காகஇ அவர்களின் அராக்கியத்துக்குத் துணைபோய் தமிழின துரோகத்தை செய்து வரும் இந்த அனைத்து ஊடகங்களுக்கும் நாம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

தாயகத்திலிருந்து
கவே.கரிகாலன்.